நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குந்நம்விளாகம் கோயிலில் பிரதோஷ வழிபாடு

களியக்காவிளை அருகே குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:14 pm

Din

களியக்காவிளை அருகே குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 2ஆவது ஆலயமான மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மகாதேவா் கோயில், குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயில், விளவங்கோடு திற்பிலாங்காடு காளைவிழுந்தான் மகாதேவா் கோயில், குழித்துறை மகாதேவா் கோயில், பாறசாலை மகாதேவா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.