நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுக்கடை அருகே 2 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

புதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:05 pm

Din

புதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுக்கடை காவல் ஆய்வாளா் ஜானகி தலைமையிலான போலீஸாா் புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். மாராயபுரம் பகுதியில் வந்த கூண்டு வண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் கேரளத்துக்கு கடத்துவதற்காக 35 கேன்களில் 2 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருநத்து தெரியவந்தது. ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.

புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, கூண்டு வண்டி, 2 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய்யைப் பறிமுதல் செய்தனா்.