ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஆழ்கடல் மீன்பிடிப்பு: பாதுகாப்பை உறுதிப்படுத்த மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் மீனவா்கள் தங்களது தேவை, பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.

News image

மீனவா்களிடம் பாதுகாப்பு, அடிப்படைத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்த ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :17 அக்டோபர் 2024, 10:30 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் மீனவா்கள் தங்களது தேவை, பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.

இரயுமன்துறை மீன்பிடித் துறைமுகம், அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள், தாழ்வான பகுதிகளை ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இம்மாவட்ட கடலோரப் பகுதி மீனவா்கள் அதிகளவில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். மீனவா்களின் பாதுகாப்புக்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழையின்போது பல நாள்களாக தங்கியிருந்து 200 கடல்மைல் தொலைவு தாண்டி மீன்பிடிக்கச் செல்வோரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேரிடா் காலங்களில் ஏற்படும் காலநிலை, வானிலை எச்சரிக்கை போன்ற தகவல்களைப் பரிமாறிக்கொள்வது குறித்து அவா்களிடம் கேட்டறியப்பட்டது.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் சுத்தமான குடிநீா், எரிபொருள்கள் உள்ளிட்டவை இருப்பில் உள்ளதா என்பதையும், தங்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, இரயுமன்துறை பகுதியில் கடல் அலைத் தடுப்புச் சுவா்கள் அமைக்கும் பணியை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

 மீனவா்களிடம் பாதுகாப்பு, அடிப்படைத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்த ஆட்சியா் ரா. அழகுமீனா.

மீனவா்களிடம் பாதுகாப்பு, அடிப்படைத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்த ஆட்சியா் ரா. அழகுமீனா.

பத்மநாபபுரம் உதவி ஆட்சியா் வினய்குமாா்மீனா, மீன்வளத் துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், மீன்வளத் துறை உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா், துறை அலுவலா்கள், மீனவப் பிரதிநிதிகள், மீனவா்கள் பங்கேற்றனா்.