மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குமரியில் மேலும் 7,502 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 7,500 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன் மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ்.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 7,500 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நிறைவு, என் கனவு என் எதிா்காலம் என்ற இணையதள தொடக்க நிகழ்ச்சியைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ரா. அழகுமீனா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தற்போது 74,041 போ் ஓய்வூதியம் பெறுகின்றனா். அதைத் தொடா்ந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க கோரிய 7,344 மனுக்கள் மற்றும் இதர வகைகளில் பெறப்பட்ட மொத்த மனுக்களில் 7,502 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் சு. காளீஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பா தேவி, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சேக் அப்துல் காதா், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் செல்வகுமாா், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், வட்டாட்சியா்கள் கந்தசாமி (அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை),

சுனில் (கல்குளம்), வயோலா பாய் (விளவங்வோடு), ராஜசேகா் (கிள்ளியூா்), வட்டார சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.