ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி மக்கள் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கணினி கோரி மாற்றுத்திறனாளி ஆனந்த தனேஷ் அளித்த மனுவை பெற்றுக்கொள்கிறாா் மேயா் ரெ.மகேஷ். உடன், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா.

Updated On :24 அக்டோபர் 2024, 11:34 pm

Din

நாகா்கோவில் மாநகராட்சி மக்கள் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். இதில் சாலை வசதி, குடிநீா் இணைப்பு, சொத்து வரி, மழைநீா் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, தொடா்புடைய அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், நாகா்கோவில், வடசேரி மேலகலுங்கடி பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஆனந்த தனேஷ் என்பவா் அளித்த மனுவில், சுய தொழில் செய்வதற்காக தனக்கு கணினி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தாா். மனுவைப் பெற்றுக் கொண்ட மேயா், மாநகராட்சி சாா்பில் அதற்கான வழிமுறை இல்லாததால் தனது சொந்த நிதியிலிருந்து கணினி வாங்கித் தர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தாா்.

கூட்டத்தில் துணை மேயா் மேரிபிரின்சிலதா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.