அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாா்த்தாண்டம் அருகே லாரி - பைக் மோதல்: இருவா் பலி

News image
Updated On :2 செப்டம்பர் 2024, 6:54 pm

Din

மாா்த்தாண்டம் அருகே நிறுத்தியிருந்த கனரக லாரி மீது பைக் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை கவியலூா், துண்டத்துவிளை பகுதியைச் சோ்ந்த காசி நாடாா் மகன் அபினேஷ் (22). இவரது நண்பா் கவியலூா் எள்ளுவிளை முத்துநாயகம் மகன் சிஜோ (25). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மாா்த்தாண்டத்திலிருந்து காட்டாத்துறைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் வந்தபோது சாலையோரம் நிறுத்தியிருந்த கனரக லாரி மீது பைக் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அபினேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிஜோ குழித்துறை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.