மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஓணம் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் குமரி மக்கள்

கேரளத்தின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை வரவேற்க, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தயாராகியுள்ளனா். இதையொட்டி அத்தப்பூ கோலமிடுதல், குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 6) தொடங்குகிறது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:58 pm

Din

கேரளத்தின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை வரவேற்க, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தயாராகியுள்ளனா். இதையொட்டி அத்தப்பூ கோலமிடுதல், குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 6) தொடங்குகிறது.

ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தன்று துவங்கி சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என 10 நாள்கள் பூக்களால் அலங்கரித்து அத்தப்பூ கோலம் போடப்படுகிறது.

கேரளத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஓணம் விழா வியாழக்கிழமை தொடங்கியது. ஆனால் கேரளத்தையொட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 6) ஓணம் விழா தொடங்குகிறது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக மஞ்சள் மற்றும் அடா் மஞ்சள் நிறத்திலான கிரேந்தி பூக்களுக்கு அதிக தேவை உள்ளது. இதனால் ஒசூா், உதகை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலிருந்து தோவாளை மலா் சந்தைக்கு பூக்கள் அதிகளவில் வரவழைக்கப்படுகிறது.

நிகழாண்டு ஓணம் பண்டிகை செப். 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கேரள மக்கள் அதிகம் போ் வசிக்கும் சென்னை, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வயநாட்டில் ஏற்பட்ட பேரிடா் காரணமாக கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டிய அரசு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.