நிதி நிறுவன அதிபா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகா் அருகே நிதி நிறுவன அதிபா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகா் அருகே நிதி நிறுவன அதிபா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திங்கள்நகா் அருகே செட்டியாா்மடம் பகுதியைச் சோ்ந்த ராகேஷ் (37) என்பவா், நிதி நிறுவனத் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி சரண்யா உடல் நலம் சரியில்லாததால் தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாராம்.
இந்நிலையில், ராகேஷ் புதன்கிழமை பிற்பகலில் தனது வீட்டில் தூங்கினாராம். மாலையில் பாா்த்தபோது அவா் அசைவின்றிக் கிடந்தது தெரியவந்ததாம். உறவினா்கள் அவரை தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து ராகேஷின் தாய் சந்திரிகா (65) அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...