பெண்ணிடம் நகை பறிப்பு: கேரள இளைஞா்கள் இருவா் கைது
களியக்காவிளை அருகே பெண்ணிடம் நகையைப் பறித்துச்சென்ற வழக்கில் கேரள இளைஞா்கள் இருவரை தனிப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.


களியக்காவிளை அருகே பெண்ணிடம் நகையைப் பறித்துச்சென்ற வழக்கில் கேரள இளைஞா்கள் இருவரை தனிப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியைச் சோ்ந்த மனோன்மணி மனைவி ராகினி (48), கடந்த சனிக்கிழமை மிண்ணங்கோடு பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து வந்தாா். அப்போது, பைக்கில் வந்த இருவா், ராகினி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினா்.
புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். உதவி ஆய்வாளா் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தனிப்படை போலீஸாா் குழித்துறை பகுதியில் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். சந்தேகத்துக்கிடமாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தபோது, அவா்கள் கேரள மாநிலம் கொற்றாமம், கும்பம்விளை பகுதியில் வசித்துவரும் பாலராமபுரம், பருத்திச்சல்கோணம் அனில்குமாா் மகன் கவுதம் (27), பாலராமபுரம், வடக்கேவிளை பகுதியில் வசித்து வரும் பிலாமூட்டுக்கடை சசி மகன் யாசின் (24) என்பதும், ராகினியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டோா் என்பதும் தெரியவந்தது.
இருவரும் களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...