தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாது மணல் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

News image

ஆட்சியரிடம் மனு அளித்த எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :27 செப்டம்பர் 2024, 8:06 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் மணலில் இருந்து கனிமங்கள் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவிடம் மனு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தலைமையில் அக் கட்சியினா் ஆட்சியரிடம்

வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிள்ளியூா் வட்டத்துக்குள்பட்ட 1,144 ஹெக்டோ் நிலப்பரப்பில் ஐஆா்இஎல் நிறுவனம் தாது மணல் எடுக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தை ரத்து செய்து, தாது மணல் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், உயிரையும் பாதிப்புக்குள்ளாக்கும் புற்றுநோய் பரவலுக்கான காரணங்கள் குறித்த ஆய்வை மருத்துவக் குழு மூலமாக மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால்சிங், நாகா்கோவில் மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா், மாநில பொதுச்செயலாளா் பால்ராஜ், ஐஎன்டியூசி மாவட்டத்தலைவா் சிவகுமாா், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆஸ்கா்பிரெடி, கிறிஸ்டிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.