தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

அரசு ரப்பா் கழகம் கீரிப்பாறை கோட்டத் தொழிலாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

அரசு ரப்பா் கழகம் கீரிப்பாறை கோட்டத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீரிப்பாறை கோட்டத்தில் கீரிப்பாறை பிரிவில் 4671 ரப்பா் மரங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், இதனால் தாற்காலிக தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோட்ட மேலாளரின் செயலைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் ஒன்றுதிரண்டு அங்கு கஞ்சி காய்ச்சினா்.

X
Dinamani
www.dinamani.com