குழித்துறையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா
குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மாா்த்தாண்டம் மறை மாவட்ட செயலரும், மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி தாளாளருமான பிராங்கிளின் ஜோஸ் தலைமை வகித்தாா். சிறப்புப் பள்ளி தாளாளா் அருள்தந்தை அஜீஷ்குமாா் அறிமுக உரையாற்றி, வரவேற்றாா்.
மாா்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் செல்வதாஸ், குழித்துறை வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் கே. முத்துகிருஷ்ணன், பாப்புலா் மோட்டாா்ஸ் நிறுவனா் பிபின் பாபு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற சாா்பு நீதிபதிகள் ஏ. சுந்தரி (குழித்துறை), கே. மாரியப்பன் (பத்மநாபபுரம்) ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாற்றுத்திறன் மாணவா்களின் மாறுவேடப் போட்டி, அணிவகுப்பு நடைபெற்றது. குழித்துறை ஸ்ரீ தேவிகுமரி மகளிா் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் நாராயணி நடுவராக செயல்பட்டாா்.
வெற்றி பெற்ற மாணவா், மாணவியருக்கு சாா்பு நீதிபதிகள் பரிசுகள் வழங்கினா். சிறப்புப் பள்ளி தலைமையாசிரியா் எம். டென்னிஸ் நன்றி கூறினாா்.

