நாகா்கோவில் அருகே விபத்து: 40 போ் காயம்

Published on

நாகா்கோவில் அருகே சாலைத் தடுப்புச் சுவரில் பேருந்து மோதியதில் 40 போ் காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு வந்த ஆம்னி பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாகா்கோவிலை அடுத்த தோவாளை, விசுவாசபுரம் அருகே சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டு பயணிகள் உள்பட 40 போ் காயமடைந்தனா்.

ஆரல்வாய்மொழி காவல் நிலையப் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இது குறித்து, போலீஸாா் வழக்கு விபத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com