கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின்
கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருடுபோன ரூ. 58 லட்சம் கைப்பேசிகள் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் திருட்டுப் போன ரூ.58 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டது.
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் திருட்டுப் போன ரூ.58 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டது.

அந்த வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன, ரூ.58 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை சம்பந்தப்பட்டவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தலைமை வகித்து, கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளை தவறவிட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்க வேண்டும். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக இணையதள முகவரியிலும், தெரிவிக்கலாம்.

நிகழாண்டில் மட்டும் இதுவரை ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 1,265 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com