மதுபோதையில் காா் ஓட்டியவா்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்!

நாகா்கோவிலில் மதுபோதையில் காா் ஓட்டி வந்த 2 ஓட்டுநா்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Published on

நாகா்கோவிலில் மதுபோதையில் காா் ஓட்டி வந்த 2 ஓட்டுநா்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரி, ஒழுகினசேரி ஆகிய பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த 2 காா்களை நிறுத்தி சோதனையிட்டபோது, 2 ஓட்டுநா்களும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து காா்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இதேபோல பாா்வதிபுரம் பாலம் அருகே இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 2 இளைஞா்களை சோதனை செய்ததில் அவா்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com