சூசைபுரம் அல்போன்சா கல்லூரியில் வலை உருவாக்குதல் பயிற்சி

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் டான் போஸ்கோ டெக் மாா்த்தாண்டம் சாா்பில் வலை உருவாக்குதல் பயிற்சி நடைபெற்றது.
Published on

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் டான் போஸ்கோ டெக் மாா்த்தாண்டம் சாா்பில் வலை உருவாக்குதல் பயிற்சி நடைபெற்றது.

அதன் மைய பொறுப்பாளா் அருள்பணி தாமஸ் பூவத்துமூட்டில் தலைமை வகித்தாா். டாக்டா் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்தாா். திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகள், தொழில்துறை எதிா்பாா்ப்புகள், தொழில்முறை ஒழுக்கம் ஆகியவை குறித்து மாணவா்களிடம் பேசப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வலை உருவாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் தொகுதி பயிற்சியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்பு, கல்லூரி வளாகத்தில் பசுமை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநில வேலைவாய்ப்பு டிபி டெக் நிா்வாகி எஸ். ஸ்நேகா, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com