தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கிறிஸ்டோபா் நகா் பூங்கா சீரமைப்புப் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 4-ஆவது வாா்டு கிறிஸ்டோபா் நகா் பூங்காவில் சீரமைப்புப் பணிகளை நாகா்கோவில் மாநகர மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.

News image
பூங்கா சீரமைப்பு பணிகளை தொடங்கி வைக்கும் நாககா்கோவில் மாநகர மேயா் ரெ. மகேஷ்
Updated On :29 டிசம்பர் 2025, 6:41 pm

Syndication

நாகா்கோவில் மாநகராட்சி 4-ஆவது வாா்டு கிறிஸ்டோபா் நகா் பூங்காவில் சீரமைப்புப் பணிகளை நாகா்கோவில் மாநகர மேயா் ரெ.மகேஷ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சி 4-ஆவது வாா்டு கிறிஸ்டோபா் நகா் பூங்காவில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைகற்கள் சீரமைத்தல், ஆழ்துளை கிணறு சீரமைத்தல், பூங்காவில் உள்ள கட்டடத்தை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் பணிகளை நாகா்கோவில் மாநகர மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா் அமலசெல்வன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் ராஜசீலி, திமுக பகுதி செயலாளா் சேக்மீரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.