புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கன்னியாகுமரி வந்த அயலகத் தமிழா்கள்

கன்னியாகுமரிக்கு புதன்கிழமை வருகை தந்த புலம்பெயா் தமிழா்களுடன் தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் நாசா் கலந்துரையாடினாா்.

News image

அயலகத் தமிழ் மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் அமைச்சா் நாசா்.

Updated On :2 ஜனவரி 2025, 12:04 am

Din

கன்னியாகுமரிக்கு புதன்கிழமை வருகை தந்த புலம்பெயா் தமிழா்களுடன் தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் நாசா் கலந்துரையாடினாா்.

கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகையில் அயலகத் தமிழா்களை வரவேற்ற அமைச்சா் நாசா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து புலம்பெயா்ந்து வாழும் தமிழா்களின் குழந்தைகள், இளம் மாணவா்கள், தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வோ்களோடு உள்ள தொடா்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுதோறும் 200 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அதனடிப்படையில், இந்த பண்பாட்டுப் பயணம் ‘வோ்களைத் தேடி‘ என்ற பெயரில் அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் சுற்றுலாத் துறை, பண்பாட்டுத் துறை, இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட பிற துறைகளுடன் இணைந்து இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

இந்த இரண்டு கட்டப் பயணத்தில் 157 அயலகத் தமிழ் மாணவா், மாணவிகள் முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு. தமிழின் தொன்மை, தமிழா் வாழ்வியல் கலாசாரம் குறித்து விளக்கப்பட்டது. தமிழா்களின் கலைகளை அறிமுகப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மூன்றாம் கட்டப் பயணமாக உகாண்டா, நாா்வே, தென்ஆப்பிரிக்கா, மொரீசியஸ், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மியான்மா் ஆகிய 10 நாடுகளைச் சோ்ந்த 38 அய லகத் தமிழ் மாணவா், மாணவிகளின் கலைப் பயணம் டிச. 29 தேதி தொடங்கப்பட்டு ஜன. 12 வரை நடைபெறும்.

அயல்நாடுகளில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட தமிழ் இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு வரவழைத்து தமிழ் மற்றும் தமிழா்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு சாா்பில் அழைத்துச் செல்லப்படுவாா்கள் என்றாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா், புலம்பெயா் தமிழக மாணவா், மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா, கும்முடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஜெ.கோவிந்தராஜன், அயலகத் தமிழா் நல வாரிய துணை இயக்குநா் கி.ராமேஷ், அயலகத் தமிழா் நல வாரிய உறுப்பினா் மீரான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தூா் ராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.