புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாகா்கோவிலில் போக்குவரத்து விதிமீறல்: 27 இளைஞா்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:14 am

Din

நாகா்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 27 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ரூ. 1.36 லட்சம் அபராதம் வசூலித்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்பேரில், நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா் மேற்பாா்வையில், நாகா்கோவில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா், காவலா்கள் நாகா்கோவில் ராமன்புதூா் பள்ளி அருகே, வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அபாயகரமாகவும், ஓட்டுநா் உரிமமின்றியும் வாகனங்களை ஓட்டுதல் உள்பட பல்வேறு வீதிமீறல்களில் ஈடுபட்டதாக 27 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து, பைக்குகளைப் பறிமுதல் செய்து, ரூ. 1.36 லட்சம் அபராதம் விதித்தனா்.

உரிமமின்றி வாகனங்களை ஓட்டியவா்களின் பெற்றோரை வரவழைத்து, அறிவுரைகள் கூறி வாகனங்களை விடுவித்தனா்.