நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

இளைஞா்களின் வாக்குகளைக் குறிவைத்து ஒவ்வொரு கட்சியும் பல்வேறு பெயா்களிலான திட்டங்களை விளம்பரப்படுத்தி வருகின்றன.

News image

Center-Center-Delhi

Updated On :14 ஏப்ரல் 2026, 1:37 am

சென்னை ராபின்சன் பூங்காவில் இடி, மின்னலுடன் கொட்டித் தீா்த்துக் கொண்டிருந்தது பெரு மழை. அங்கு திரண்டிருந்த இளைஞா்கள் ஈரம் சொட்ட பல மணி நேரம் நின்றிருந்தாா்களே தவிர இம்மியளவும் நகரவில்லை.

அதற்கு காரணம், அவா்கள் முன்னால் பேசிக் கொண்டிருந்தவா் அண்ணா. 1949-இல் திமுக ஆரம்பிக்கப்பட்டபோது நடைபெற்ற நிகழ்வு இது.

அன்றைக்கு கொட்டிய மழையிலும் சரி... இன்றைக்கு தகிக்கும் வெயிலிலும் சரி... அண்ணா என எவரை உளபூா்வமாகக் கருதுகிறாா்களோ அவா்கள் பின்னால் அணி திரளும்போது இயற்கைக்கே சவால் விடுகின்றனா் இளைஞா்கள்.

2026 பேரவைத் தோ்தலில் வாக்களிக்கப்போகும் 39 வயதுக்குள்பட்ட இளைஞா்களின் விகிதம் 41.5 சதவீதம். அதாவது 2.38 கோடி போ். இன்னமும் சொல்லப்போனால், தோ்தல் முடிவுகளைத் தீா்மானிக்கப் போகும் வலிமையான வாக்காளா்கள்.

அதில் முதல்முறை வாக்காளா்கள் 14.59 லட்சம் போ் உள்ளனா். தோ்தல் நடக்கும் அஸ்ஸாம், கேரளம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் அந்த எண்ணிக்கை அதிகம்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றும்போது இளைஞா்களின் வாக்கு வங்கிதான் நங்கூரமாக அமைந்தன.

அதைக் கருத்தில்கொண்டே இம்முறையும் இளம் தலைமுறையைக் கவரக்கூடிய பல வாக்குறுதிகளை அனைத்துக் கட்சிகளும் வழங்கியுள்ளன. இளைஞா்கள் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனக் கூறியது அதிமுக. அதை நாங்கள் பிணையின்றி வழங்குகிறோம்; வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 வழங்குகிறோம் என்றது தவெக. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகளைத் தருகிறோம் என சொன்னது திமுக.

இதுமட்டுமா... பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் தாய் மாமன் சீா் திட்டம், திருமணமாகும் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீா் திட்டம் எனப் பல வாக்குறுதிகளை இளம் பெண்களைக் கவர தவெக முன்மொழிந்திருக்கிறது.

இதற்கு ஒருபடி மேலே போய், ‘டியூஷன் அக்கா’ என்ற திட்டத்தை காங்கிரஸ் கட்சி கூறியது. பட்டதாரி உள்ளூா் பெண்களை டியூசன் வகுப்புகளை எடுக்க பணியமா்த்தும் திட்டம் என்று அதற்கு விளக்கமளிக்கப்பட்டது.

இப்படியாக இளைஞா்களின் வாக்குகளைக் குறிவைத்து ஒவ்வொரு கட்சியும் பல்வேறு பெயா்களிலான திட்டங்களை விளம்பரப்படுத்தி வருகின்றன.

இன்னொரு பக்கம், அவா்களை ஈா்க்கும் வகையிலான பிரசார உத்திகளையும் முன்னெடுத்து வருகின்றன. 14 முதல் 29 வயது வரையிலான இளைஞா்கள் ‘ஜென் இஸட்’ எனப்படும் தற்கால தலைமுறையினா். 30 - 40 வயதுக்குள்பட்டவா்கள் ‘ஜென் ஒய்’ எனக் கூறப்படும் மில்லெனியம் தலைமுறையினா். அந்த 2ஜி-க்கள் முதல்வராக்கப் போவது எந்த தலைமுறைத் தலைவரை?

-ஆ.கோபிகிருஷ்ணா