நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கேரளத்திலிருந்து கழிவுகள் ஏற்றிவந்த லாரி பறிமுதல்: இருவா் கைது

கேரளத்திலிருந்து உணவக கழிவுகளை ஏற்றிவந்த மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநா் உள்பட இருவரை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:08 pm

Din

கேரளத்திலிருந்து உணவக கழிவுகளை ஏற்றிவந்த மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநா் உள்பட இருவரை கைது செய்தனா்.

கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள், இறைச்சி மற்றும் மீன் கழிவுகளை மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மாவட்ட காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் நித்திரவிளை காவல் நிலைய ஆய்வாளா் அந்தோணியம்மாள் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். நித்திரைவிளை சந்திப்பு அருகே

கேரளத்திலிருந்து வந்த மினி லாரியை நிறுத்திச் சோதனையிட்டனா்.

அதில், காய்கனி கழிவுகள், உணவக கழிவுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள பன்றி பண்ணைக்கு கொண்டு செல்வதாக மினிலாரி ஓட்டுநா் தெரிவித்தாா். இதையடுத்து அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து, மினிலாரி ஓட்டுநா் பணகுடி ரோஸ்மியாபுரம் பகுதியைச் சோ்ந்த சிவா (29), உதவியாளா் மணிகண்டன் (23) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.