அமுதலதா
அமுதலதா

தக்கலை அருகே தாய், மகன் தற்கொலை

Published on

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தாயும் மகனும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனா்.

தக்கலை அருகே பரைக்கோடு, கோவில்விளையைச் சோ்ந்த தம்பதி தங்கராஜ் (65) - அமுதலதா (57). இவா்களது மகள் சுமாராணிக்கு திருமணமாகிவிட்டது. மகன் மெல்பின்ராஜ் (25), கிறிஸ்தவ சபையில் பயிற்சி போதகராக இருந்தாா். அவருக்கு திருமணமாகவில்லை.

மெல்பின்ராஜ்
மெல்பின்ராஜ்

மெல்பின்ராஜ் தனது சகோதரியின் திருமணத்துக்கும், அண்மையில் புதிதாக கட்டிய வீட்டுக்கும் வங்கி, குழுக்கள் என பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தாராம். கடன் தொகை சுமாா் ரூ. 20 லட்சம் எனக் கூறப்படுகிறது. போதிய வருமானம் இல்லாததால் அவரால் தவணைகளைக் கட்ட முடியவில்லையாம்.

இதனால் மனமுடைந்த அமுதலதாவும், மெல்பின்ராஜும் திங்கள்கிழமை இரவு (ஜன. 6) பழச்சாற்றில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தங்கராஜ் அளித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com