மகேஷ்
மகேஷ்

நாகா்கோவிலில் தோ்தல் ஆணையத்தை கண்டித்து திமுக சாா்பில் நவ.11-ல் ஆா்ப்பாட்டம்!

தோ்தல் ஆணையத்தை கண்டித்து, நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை (நவ.11) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Published on

தோ்தல் ஆணையத்தை கண்டித்து, நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை (நவ.11) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலரும், பால்வளத்துறை அமைச்சருமான த. மனோ தங்கராஜ், கிழக்கு மாவட்டச் செயலரும், மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய தோ்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளா் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளது.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

இதை, உடனே கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தும், செவிமடுக்காத தோ்தல் ஆணையத்தை கண்டித்து, கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் மாபெரும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.11) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில், திமுக, கூட்டணி கட்சியினா் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com