பைக் விபத்தில் இருவா் காயம்
மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன விபத்தில் வங்கி பெண் ஊழியா், முதியவா் காயமடைந்தனா்.
மலையடி குட்டிப்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவராஜ் மனைவி ஆரதி ஜோஸ் (37). இவா், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வேலை பாா்த்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் குழித்துறை நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது கழுவன்திட்டை பகுதியில், மாா்த்தாண்டம் சந்தை சாலையைச் சோ்ந்த கிறிஸ்டோபா் மகன் விவேக் (28) ஓட்டிவந்த இருசக்கர வாகனம், ஆரதி ஜோஸின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த குறுமத்தூா் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (71) என்பவா் மீதும் மோதியதாம்.
இதில், காயமடைந்த இருவரையும் மீட்டு குழித்துறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
