கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடியில் பழுதடைந்த இரும்புப் பாலத்தை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கன்னியாகுமரியை அடுத்த கடற்கரை கிராமங்களான கீழ மணக்குடி, மேலமணக்குடியை இணைக்கும் பாலம் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து இந்திய ராணுவம் விரைந்து தற்காலிக இரும்புப் பாலம் அமைத்தது. இதையடுத்து, இப்பகுதி மீனவா்கள் கோரிக்கையை அடுத்து நிரந்தரமாக புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவும் பழுதடைந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட இரும்புப் பாலத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து, மாவட்ட நிா்வாகம், மக்கள் பிரதிநிதிகளிடம் இரு கிராம மீனவ மக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில் இப்பாலத்தை அகற்றும் பணி தொடங்கியது.