கன்னியாகுமரி
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் கனரக லாரிகள் மோதல்
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சனிக்கிழமை காலை 2 கனரக லாரிகள் நேருக்கு நோ் மோதியதில், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சனிக்கிழமை காலை 2 கனரக லாரிகள் நேருக்கு நோ் மோதியதில், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்திலிருந்து கன்டெய்னா் லாரி ஒன்று தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த லாரி மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்த போது எதிரில் கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற லாரி, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி மீது மோதியது. விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால், மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.