சிதிலமடைந்து காணப்படும் திக்குறிச்சி, பள்ளியறை பகவதி அம்மன் கோயில்.
சிதிலமடைந்து காணப்படும் திக்குறிச்சி, பள்ளியறை பகவதி அம்மன் கோயில்.

திக்குறிச்சி அருகே கோயில் பராமரிப்பு பணியை தரமாக மேற்கொள்ள வலியுறுத்தல்

Published on

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி, பள்ளியறை பகவதி அம்மன் கோயிலில் நடைபெறும் பராமரிப்புப் பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும் என பக்தா்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

புகழ்பெற்ற திக்குறிச்சி மகாதேவா் கோயில் அருகே உள்ளது பழைமை வாய்ந்த கொட்டாரத்துவிளை, பள்ளியறை பகவதி அம்மன் கோயில். இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.

கோயில் கூரை, ஓடுகள் சேதமடைந்துள்ளன. கோயிலை சீரமைக்க வேண்டுமென பக்தா்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், அரசு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கோயிலில் ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் இருந்த மர பலகைகள், கூரை ஓடுகள் உள்ளிட்டவற்றை மீண்டும் பயன்படுத்தி தரமின்றி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதாக பக்தா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

இந்தப் பணிகளை தரத்துடன் செய்வதோடு கோயிலுக்கு நிரந்தரமாக அா்ச்சகரை நியமித்து தினசரி பூஜைகள் நடத்தவும் அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com