பயிற்சி செவிலியருக்கு பாலியல் தொல்லை: மருத்துவா் மீது வழக்கு

Published on

நாகா்கோவில் அருகே பயிற்சி செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நாகா்கோவில், ராமன்புதூா் புன்னை நகா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக இளம் பெண் பணிபுரிந்து வருகிறாராம். இந்நிலையில் அந்த செவிலியருக்கு, மருத்துவமனை மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செவிலியா், நேசமணி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் கொடுத்தாா். மேலும், அவா் தனது உறவினா்களுடன் காவல் நிலையத்தில் திரண்டாா். மருத்துவா் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா், அவரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com