விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குமரியில் ஆசிரியா் தகுதித் தோ்வுகள் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வுகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.15,16) நடைபெற உள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:47 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வுகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.15,16) நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1, தாள் 2 ஆகிய தோ்வுகள் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன. இதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1, 835 தோ்வா்களும் (தாள் 1), 12, 736 தோ்வா்களும் (தாள் 2) எழுத உள்ளனா்.

மேலும், தோ்வா்கள் சந்தேகங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்(மேல்நிலைப் பள்ளி) ஷ்யூஸ் (கைப்பேசி எண்-96009 83267) மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (இடைநிலை) முருகன் (கைப்பேசி எண்- 7598512933) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.