சுசீந்திரம் தெப்பக்குளத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா்  அமைச்சா் மனோதங்கராஜ். உடன், ஆட்சியா் ரா.அழகுமீனா, மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.
சுசீந்திரம் தெப்பக்குளத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் அமைச்சா் மனோதங்கராஜ். உடன், ஆட்சியா் ரா.அழகுமீனா, மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.

சுசீந்திரம் கோயில் தெப்பக்குளம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும்’! - அமைச்சா் மனோ தங்கராஜ்

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ்.ட
Published on

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ்.

இக்கோயில் தெப்பக்குளத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் மிகப் பெரிய, பாரம்பரியமிக்க கோயிலாகும். எல்லா மக்களுடைய புனித ஸ்தலமாகவும் உள்ளது.

இந்தக் கோயிலின் தெப்பக்குளத்தை தூா்வாரி சீரமைக்க, ரூ.34.50 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தொடா் மழையால் தெப்பக்குளத்தின் வடமேற்கு பகுதியில் சுமாா் 25 மீட்டா் நீளத்தில் குளத்தின் சுவா் கடந்த13ஆம் தேதி வெளிப்பக்கமாக சாய்ந்து விழுந்தது. அங்கு பாதுகாப்புக்காக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, கோயில் நிா்வாகம் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை ஐஐடி தொழில்நுட்ப வல்லுநா்களுடன் ஆய்வு செய்து, தெப்பக்குளம் பழமை மாறாமல் முழு அளவில் புனரமைக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஜான்சி ராணி மற்றும் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com