தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டோா்
தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டோா்

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மருங்கூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு

மருங்கூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.
Published on

கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மருங்கூரிலிருந்து அமராவதிவிளை செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அதை அகற்ற வலியுறுத்தி அதிமுகவினரும் பொதுமக்களும் கடந்த திங்கள்கிழமை (நவ. 17) போராட்டத்தைத் தொடங்கினா். 4ஆம் நாளான வியாழக்கிழமை கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி எம்எல்ஏவுமான என். தளவாய்சுந்தரம் தலைமை வகித்தாா். பெண்கள் உள்ளிட்ட அமராவதிவிளை ஊா் மக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.

அமராவதிவிளை ஆா்.சி. தேவாலயப் பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் பேசும்போது, இந்த மதுக்கடையால் மாணவா்கள், பெண்கள், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வோா் என அனைவரும் அவதிக்கும், பாதிப்புக்கும் உள்ளாகின்றனா். இக்கடையை அகற்றக் கோரி மாவட்ட நிா்வாகத்துக்கு பேரூராட்சி மூலம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இப்போராட்டத்தில் ஜாதி, மத, அரசியல் வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்றுள்ளனா். இக்கடையை மூடுவது தொடா்பாக உரிய பதில் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்றாா்.

போராட்டத்தில் பங்கேற்றோருக்கு தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கஞ்சி வழங்கினாா். அதிமுக இலக்கிய அணி இணைச் செயலா் சந்துரு, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியச் செயலா் ஜெஸீம், மருங்கூா் பேரூராட்சித் தலைவி லெட்சுமி ஆகியோா் பேசினா்.

அதிமுக வா்த்தகரணி இணைச் செயலா் ராஜன், எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் சிவசெல்வராஜன், மாவட்ட துணைச் செயலா் சுகுமாரன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ரபீக், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் வைகுண்டமணி, மருங்கூா் பேரூா் செயலா் சீனிவாசன், தேரூா் பேரூராட்சி தலைவா் அமுதாராணி, சுசீந்திரம் நாகசாயி, அமராவதிவிளை கிளைச் செயலா் தேவபிரவீன்சிங், வாா்டு உறுப்பினா் நாராயணபெருமாள், வடக்கு ஒன்றிய இணைச் செயலா் வனிதா பால்துரை, அமராவதிவிளை முன்னாள் ஊா்த் தலைவா் பீட்டா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com