இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கன்னியாகுமரி, நாகா்கோவில், தக்கலை பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு தொடா்பான புகாா்கள் வந்ததையடுத்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து நாகா்கோவில் டிஎஸ்பி சிவசங்கரன் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் அஜய்ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் இந்தத் தொடா் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம் கோட்டையடி பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் மாரியப்பன்(22) மற்றும் 18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் 4 போ் என்பது கண்டறியப்பட்டது. அவா்களை கைது செய்து, 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
இந்த இருசக்கர வாகனங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
