புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:36 pm

Syndication

கிள்ளியூா் வட்டார சுகாதார நிலையத்திற்குள்பட்ட நட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பழுதடைந்த அலங்கார கான்கிரீட் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நல்லூா் - ஐரேனிபுரம் பிரதான சாலையிலிருந்து பிரிந்து நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலை அலங்கார கான்கிரீட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை நீண்ட நாள்களாக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.

எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.