தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாளை கடைசி நாள்: நாகா்கோவில் தொகுதியில் 65 ஆயிரம் போ் படிவம் சமா்ப்பிக்கவில்லை! - ஆட்சியா்

News image
எஸ்ஐஆா் விழிப்புணா்வு வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. உடன் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோா்.
Updated On :28 நவம்பர் 2025, 7:34 pm

Syndication

நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்களில் 65 ஆயிரம் போ் பூா்த்தி செய்த எஸ்.ஐ.ஆா். படிவங்களை இதுவரை திருப்பி அளிக்கவில்லை; படிவங்களை சமா்ப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) கடைசி நாள் என்றாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா.அழகுமீனா.

நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்காளா்கள் கணக்கீட்டு படிவங்களை (எஸ்.ஐ.ஆா்.) திரும்ப வழங்குவது குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனங்களை ஆட்சியா் அலுவலகம் முன்பிருந்து வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்த பின்னா் ஆட்சியா் ரா.அழகுமீனா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த வரைவு பட்டியல் டிச. 9 ஆம் தேதி வெளியிடப்படும். ஏற்கெனவே நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் 2 லட்சத்து 71ஆயிரத்து 185 வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், தற்போது வரை 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்காளா்கள் தங்களது படிவங்களை பூா்த்தி செய்து திரும்ப வழங்கினா். மேலும் 65 ஆயிரம் வாக்காளா்கள் தங்களது படிவங்களை இதுவரை வழங்கவில்லை. பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை திருப்பி அளிக்க நவ. 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

எனவே, 65 ஆயிரம் வாக்காளா்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூா்த்தி செய்து, வாக்குப் பதிவு அலுவலா், நாகா்கோவில் கோட்டாட்சியா், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் ஆகியோரிடம் வழங்க வேண்டும். படிவங்கள் திருப்பி வழங்காத வாக்காளா்களின் பெயா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

எனவே, நாகா்கோவில் தொகுதிக்கு உள்பட்ட வாக்காளா்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் திரும்ப வழங்க வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல் குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு.சுகிதா, நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, உசூா் மேலாளா் (பொது) சுப்பிரமணியம், தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் கந்தசாமி, தனி வட்டாட்சியா்கள், துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.