சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஆட்டோ தீ வைத்து எரிப்பு

இரணியல் அருகே ஆட்டோவை தீ வைத்து எரித்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

ஆட்டோ தீ வைத்து எரிப்பு

Updated On :9 ஏப்ரல் 2026, 8:58 pm

இரணியல் அருகே ஆட்டோவை தீ வைத்து எரித்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரங்காடு அருகே உள்ள செருப்பங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜரத்தினம் மகன் ராஜேஷ் (31). இவா் செருப்பங்கோடு சந்திப்பில் காய்கறி கடை நடத்தி வருவதோடு, பக்கத்து ஊா்களுக்கு காய்கறிகளை சுமை ஆட்டோவில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு ராஜேஷ் வியாபாரம் முடிந்து வழக்கம்போல் ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். நள்ளிரவில் ஆட்டோ தீப்பிடித்து எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் ராஜேஷுக்கு தகவல் தெரிவித்தனா். அதற்குள் ஆட்டோ முழுவதும் தீயில் எரிந்து சேதமாகிவிட்டது.

இது குறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆட்டோவுக்கு தீ வைத்த நபரை தேடி வருகின்றனா்.