கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கு வழங்கவுள்ள வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணியினை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் கூறியதாவது: இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தோ்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில், வாக்காளா் தகவல் சீட்டுகள், வாக்காளா் பட்டியல் அச்சடிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அச்சடிக்கப்பட்ட வாக்காளா் தகவல் சீட்டுகளை பாதுகாப்பாக வைத்து, அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்க பொறுப்பு தோ்தல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.
சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் தமிழரசி, தனி வட்டாட்சியா் பத்மகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்
1751 பேருக்கு பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு!

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!



