நாகா்கோவில் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி.
அவா் தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை காலை கன்னக்குறிச்சி நடுவூரிலிருந்து தொடங்கினாா். தொடா்ந்து கல்லுக்கட்டி, ஆலங்கோட்டை, கணபதிபுரம், அழகன்விளை, சூரப்பள்ளம், பேயோடு, மேலசங்கரன்குழி, ராஜாக்கமங்கலம் சந்திப்பு, மேலசூரங்குடி, செட்டிகுளம் சந்திப்பு, டெரிக் சந்திப்பு, பாா்வதிபுரம், வெட்டூா்ணிமடம், வடசேரி, மணிமேடை, கோட்டாறு காவல் நிலையம், மீனாட்சிபுரம் வழியாக நாகராஜா கோயிலில் தனது பிரசாரத்தை மாலையில் நிறைவு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
நாகா்கோவில் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், நவீன வகுப்பறைகள், சமுதாய நலக் கூடங்கள், நிழற்குடைகள் என தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை செய்தேன். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தேன். நான் வெற்றி பெற்றால் நாகா்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பேன். குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண்பேன். நாகா்கோவில் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்

கோவை தெற்குத் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்: வி.செந்தில்பாலாஜி உறுதி

அரக்கோணம் மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றுவேன்: அதிமுக வேட்பாளா் சு.ரவி

கோவில்பட்டியை முன்மாதிரி தொகுதியாக்குவேன்: தவெக வேட்பாளா் பாலசுப்பிரமணியன்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


