/
நாகா்கோவில் கோட்டாறு, மீனாட்சிபுரம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 11) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகா்கோவில் மீனாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஜூன் 11) நடைபெற உள்ளதால், காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டாறு, மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூா், வெள்ளாளா் காலனி, சவேரியாா்கோயில் சந்திப்பு, ராமவா்மபுரம், சரலூா், இந்துக்கல்லூரி, வேதநகா், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.







