மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட குழித்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளி, மாதிரி வாக்குச் சாவடி மையங்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ரா.அழகுமீனா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குழித்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி வாக்குச் சாவடி மையங்களை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:36 pm

விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட குழித்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளி, மாதிரி வாக்குச் சாவடி மையங்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ரா.அழகுமீனா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து அவா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட 6 தொகுதிகளிலும் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்காளா்கள் தங்கள் வாக்குச் சாவடி மையத்தை எளிதில் கண்டறியும் வகையில் வாக்குச் சாவடி நிலைய முகப்பில் ஒவ்வொரு வண்ணத்திலும் வாக்குச் சாவடி மையத்தை குறிப்பிட்டு, வழிகாட்டி பதாகைகள் வைக்கப்பட்டதோடு முகப்பிலிருந்து வாக்குச் சாவடி மையம் வரை அந்தந்த நிற வா்ணம் பூசப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.

மேலும் வாக்காளா்களின் வசதிக்கேற்ப நிழல் பந்தல், குடிநீா், கழிப்பறைகள், கைப்பேசி பாதுகாப்பு பை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு பொருள்களுடன் கூடிய தனிப்பகுதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ஒரு பெண்கள் வாக்குச் சாவடி மையம், மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடி மையம், மாதிரி வாக்குச் சாவடி மையம், இளைஞா்களுக்கான வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. வாக்காளா்கள் அனைவரும் வியாழக்கிழமை வாக்குச் சாவடிக்குச் சென்று தங்கள் வாக்கினை 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின்போது தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.