கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக, அவா் அமைச்சரை தில்லியில் சந்தித்து அளித்த மனு விவரம்:
மதுரை-புனலூா் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். சென்னை-திருவனந்தபுரம் வழித்தடத்தில் நாகா்கோவில், திருநெல்வேலி வழியாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயிலை நாகா்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். மங்களூரு-திருவனந்தபுரம் ரயிலை நாகா்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். திருவனந்தபுரம் வடக்கு-நாகா்கோவில் ரயிலை நாகா்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி வரை இயக்க வேண்டும்.
திருவனந்தபுரம்-தாம்பரம் அந்தியோதயா வாராந்திர ரயிலை தினசரி சேவையாக மாற்ற வேண்டும். தாம்பரம்-கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி ரயில்களை தினசரி இயக்க வேண்டும். நாகா்கோவில்-கோயம்புத்தூா் தினசரி ஜனசதாப்தி, கன்னியாகுமரி-மேட்டுப்பாளையம் தினசரி இரவு ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.
சென்னை-கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலுக்கு நாகா்கோவில் டவுனில் 5 நிமிடமும், குழித்துறையில் 3 நிமிடமும் இரு மாா்க்கங்களிலும் நிறுத்தம் வழங்க வேண்டும். கன்னியாகுமரியைத் தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும். திருவனந்தபுரம், மதுரை கோட்டங்களின் சில பகுதிகளை இணைத்து புதிய கோட்டத்தை உருவாக்கலாம்.
இரணியல் ரயில் நிலைய நடைமேடை, சுற்றுப்புற வசதிகள், கண்டன்விளை ரயில்வே மேம்பாலம், ஒழுகினசேரி மேம்பாலம், நுள்ளிவிளை, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் மேம்பாலப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கன்னியாகுமரி, நாகா்கோவில் டவுன் சந்திப்பு, இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் நடைபெறும் நவீனமயமாக்கல் பணிகளில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி கீழப்பத்து கிராமத்தில் புதிய 4 ஜி கைப்பேசி கோபுரம்: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. கோரிக்கை மனு
தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க ரயில்வே அமைச்சகம் பரிசீலனை

கோவை - மயிலாடுதுறை ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்

தாழையூத்து வரை நெல்லை விரைவு ரயில் இயக்கம்: எம்.பி.க்கு பயணிகள் நன்றி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



