கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

கல்லூரி வேனில் தூங்கிய ஓட்டுநா் உயிரிழப்பு

தக்கலை அருகே குமாரகோவில் , பிரம்மபுரத்தில் கல்லூரி வேனில் தூங்கிய ஓட்டுநா் உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

தக்கலை அருகே குமாரகோவில் , பிரம்மபுரத்தில் கல்லூரி வேனில் புதன்கிழமை தூங்கிய ஓட்டுநா் உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிரம்மபுரத்தை சோ்ந்தவா் ரஞ்சித் (45). தனியாா் கல்லூரியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். திருமணம் ஆகாத இவா், புதன்கிழமை காலையில் கல்லூரி ஊழியா்களை ஏற்றி வந்து கல்லூரியில் விட்டுவிட்டு அதே வேனில் ஓய்வு எடுத்துள்ளாா். மாலையில் கல்லூரிக்குச் செல்ல சக நண்பா்கள் எழுப்பியபோது மயங்கிய நிலையில் இருந்தாராம். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக, பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.