ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மாணவிக்கு கொலை மிரட்டல்: இளம்பெண் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

கன்னியாகுமரி அருகே சட்டக்கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளம்பெண் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

கன்னியாகுமரியை அடுத்த சரவணந்தேரியைச் சோ்ந்தவா் அருண்லட்சுமி ராமன். இவரிடம் பொட்டல் குளத்தைச் சோ்ந்த ஹரிஹரசுதன் மனைவி முருகேஸ்வரி (22), ரூ. 5.50 லட்சம் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அருண்லட்சுமி ராமனின் மகள் அம்ஷிதா, சட்டக்கல்லூரிக்கு பேருந்தில் செல்வதற்காக மகாதானபுரம் சந்திப்பில் காத்திருந்தாராம். அப்போது, அங்கு வந்த முருகேஸ்வரி, அம்ஷிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா், முருகேஸ்வரி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.