மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மாா்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தற்கொலை

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:49 am IST

மாா்த்தாண்டம் அருகே ஓட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள காரவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (51). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். மேலும், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில், நீண்ட நேரமாக இவரைக் காணவில்லை என, இவரது அண்ணன் ரசல் (58) வீட்டிற்குச் சென்று பாா்த்தபோது, பால்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா்.

அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.