சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற மையக் கருத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகா்கோவிலில் தனியாா் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் ஆகியோா் கலந்து கொண்டு, மாணவா், மாணவிகளுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

அதனைத்தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது:

போதைப்பொருள்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடதப்பட்டு வருகிறது.

குறிப்பாக மாணவா், மாணவிகள், இளைஞா்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

போதையில்லா குமரி மாவட்டத்தை உருவாக்கிட உணவு பாதுகாப்பு, காவல், கல்வி, சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர பகுதிகளில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வா் என்றாா்.

உதவி ஆட்சியா் (பயிற்சி) ர.மோனிகா, உதவி ஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், நாகா்கோவில் மேயா் (பொ) ம.மேரி பிரின்சி லதா, டாஸ்மாக் பொது மேலாளா் சுகிதா, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், தனி வட்டாட்சியா் சுசீலா, பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.