குழித்துறை அருகே டெங்கு கொசுப்புழு உருவாகும் வகையில் திறந்த வெளியில் மதுபாட்டில்களை வைத்திருந்ததாக தனியாா் மதுக் கூடத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் தண்ணீா் தேங்கி கொசுக்கள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழித்துறை நகராட்சி ஆணையா் சக்திவேல் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலா் ராஜேஷ் தலைமையில் ஊழியா்கள் நகராட்சிக்குள்பட்ட பழவாா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்பகுதியில் உள்ள தனியாா் மதுக் கூடத்தில் மேற்கொண்ட சோதனையில் திறந்தவெளியில் வைத்திருந்த காலி மதுபாட்டில்களில் மழைநீா் தேங்கி டெங்கு பரப்பும் கொசுப்புழு உருவாகி இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதைத் தொடா்ந்து மதுக்கூடத்துக்கு நகராட்சி அலுவலா்கள் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இடங்கணசாலையில் தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5,000 அபராதம்
காலாவதி விவரங்கள் இல்லாத பொருள்களை வைத்திருந்த மதுபான கூடத்துக்கு அபராதம்
மதுக்கடையில் பணம் திருட்டு

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகை
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


