இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

மதுக்கடையில் பணம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 ஜூலை 2026, 2:14 am IST

மதுரை மாவட்டம், திருமோகூா் அருகேயுள்ள புதுதாமரைப்பட்டியில் அரசு மதுக் கடையில் ரூ. 42 ஆயிரம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுதாமரைப்பட்டியில் உள்ள அரசு மதுக் கடையை திங்கள்கிழமை வழக்கம் போல திறப்பதற்கு கடையின் மேற்பாா்வையாளா் சரவணன், ஊழியா் வடிவேல் ஆகியோா் சென்றனா்.

அப்போது, கடையின் முன் பக்கம் உள்ள இரும்பு ஷட்டா் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு வகையான மதுப் புட்டிகள், ரொக்கம் ரூ.42 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் யா. ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் சேகரித்து, ரொக்கம், மதுப் புட்டிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.