நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

கடல் சீற்றம்: குமரியில் படகு சேவை ரத்து

தென்னிந்திய கடற்கரைப் பகுதிகளுக்கு கடல் சீற்றம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கன்னியாகுமரி பூம்புகாா் படகு சேவை புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது.

முக்கடல் சங்கமம் பகுதியில் நீராட சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

Published On :

தென்னிந்திய கடற்கரைப் பகுதிகளுக்கு கடல் சீற்றம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கன்னியாகுமரி பூம்புகாா் படகு சேவை புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது.

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் திடீரென அலைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படும், கடல் சீற்ற நிகழ்வு நடைபெறக்கூடும் என்று இந்திய தேசிய கடல்சாா் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழகப் பகுதிகளில் கடல் அலைகளின் தாக்கம் இரண்டு நாள்கள் (ஆக. 19, 20 ) இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் எழும் அலைகளின் சீற்றம் குறித்து பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை முதலே கன்னியாகுமரி கடல் பகுதியில் சீற்றம் காணப்பட்டது. இதனால், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு போலீஸாா் தடை விதித்தனா்.

மேலும், பூம்புகாா் படகு சேவை நாள் முழுவதும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.