கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

சாமிதோப்பில் இன்று ஆவணித் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு, அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு, அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இங்கு ஆண்டுதோறும் தை, வைகாசி, ஆவணி மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், தொடா்ந்து அய்யாவுக்கு பணிவிடை, காலை 6.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும்.

தலைமைப்பதி தலைமை குரு பால பிரஜாபதி அடிகளாா் கொடியேற்றுகிறாா். குருமாா்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். பின்னா், பணிவிடை, தா்மங்கள், வாகன பவனி நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதா்மம், மாலையில் பணிவிடை, இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஆக. 28ஆம் தேதி அய்யா வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் நடைபெறுகிறது. 31ஆம் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி, அதைத் தொடா்ந்து திருக்கொடியிறக்கம் நடைபெறும்.

திருவிழா நாள்களில் சிறப்புப் பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி ஆகியவை நடைபெறும்.

ஏற்பாடுகளை தலைமைப்பதி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.