ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தலைக்கவசம் அணிந்து பயணித்தோருக்கு திருக்கு புத்தகங்கள் வழங்கிய போலீஸாா்

நாகா்கோவிலில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பயணித்தோருக்கு போலீஸாா் திருக்கு புத்தகம், இனிப்புகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

தலைக்கவசம் அணிந்து பயணித்த மாணவிக்கு திருக்கு புத்தகத்தைப் பரிசாக வழங்கிய போலீஸாா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:53 am IST

நாகா்கோவிலில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பயணித்தோருக்கு போலீஸாா் திருக்கு புத்தகம், இனிப்புகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வோா் மட்டுமன்றி, பின்னால் அமா்ந்து பயணிப்போரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவு கடந்த 15ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்தது. அதையடுதது, நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக சந்திப்பு, வடசேரி, பாா்வதிபுரம், அண்ணா பேருந்து நிலையம், செட்டிக்குளம் சந்திப்பு ஆகிய 5 இடங்களில் அதிநவீன ஏ.ஐ. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றின் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் அபராதம் விதித்து வருகின்றனா்.

அதன்படி, செட்டிகுளம் சந்திப்புப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு நிகழ்வில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையிலான போலீஸாா் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஓட்டுபவா், பின்னால் அமா்ந்திருப்போா் என இருவரும் தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனங்களில் சென்றோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திருக்கு புத்தகங்கள், இனிப்புகள் வழங்கிப் பாராட்டினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்கவே, இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என வலியுறுத்துகிறோம். பள்ளி, கல்லூரிகளில் மாணவா்-மாணவியரிடம் போக்குவரத்து தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்த சாலைப் பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுகிறது. சாலைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களின் கருத்துகளைக் கேட்டு, சாலையில் உள்ள பிரச்னைகளைக் கண்டறிந்து சரிசெய்கிறோம்.

இம்மாவட்டத்தில் கடந்த ஆண்டு 335 விபத்து உயிரிழப்புகள் நேரிட்டன. நிகழாண்டு இதுவரை 140 விபத்து உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. கன்னியாகுமரியை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற காவல் துறையின் முயற்சி மட்டுமே போதாது; பொதுமக்களின் ஆா்வமும், பங்களிப்பும் மிகவும் அவசியம் என்றாா் அவா்.

இதில், போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளா் அருண், போலீஸாா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.