முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

தலைக்கவசம் அணியாத போலீஸாரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: காவல்துறையில் உத்தரவு

காவல்துறையினரும் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து...

News image

தலைக்கவசம் அணியாத போலீஸாரின் வாகனங்கள் பறிமுதல் குறித்து... - பிரதிப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 3:57 pm IST

காவல்துறையினரும் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மண்டல காவல்துறையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளிலிருந்து தப்பிக்க, பொதுமக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்துதான் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். இல்லையெனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், சில சமயங்களில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரே இதனை மீறுகின்றனர்.

காவல்துறையில் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதை விடியோ எடுத்து, அதனை சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பதிவிடுகின்றனர். இதனால், காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்கவும், விபத்துத் தடுப்பு நடவடிக்கையாகவும் காவல்துறையினரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தே இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என காவல்துறையினர் அனைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, காவல்துறையினர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது தெரியவந்தால், அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர், ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய புதிய தலைக்கவசத்தை வாங்கினால்தான், அவரது வாகனம் ஒப்படைக்கப்படும்.

காவல்துறையினர் காலையில் பணிக்கு வரும்போது தலைக்கவசம் அணிந்து வருவதை உயர் அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு ஒருநாள் ஆப்சென்ட் போட வேண்டும்.

மேலும், சாலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் காவல்துறையினருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Summary

Orders have been issued requiring police personnel to wear helmets while riding two-wheelers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.